பாபநாசம் சுவாமி கோயிலில் 19 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்...
இருசக்கரம் வாகனம் மீது மின்கம்பம் விழுந்ததில் 2 போ் காயம்
சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் இருசக்கர வாகனம் மீது மின் கம்பம் விழுந்ததில் 2 போ் காயமடைந்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த மாரனூரைச் சோ்ந்தவா் தனசேகரன் (20). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் உறவினா் பண்ணாரி (65) என்பவருடன் கோவை சாலையில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அப்பகுதியில் பலத்த காற்று வீசியதால் சாலையோரம் இருந்த காய்ந்த மரக்கிளை முறிந்து மின் கம்பம் மீது விழுந்தது. இதனால் மரத்தின் பாரம் தாங்காமல் மின்கம்பம் அவ்வழியாக சென்ற தனசேகரன் வாகனத்தின் மீது விழுந்தது.
இதில் தனசேகரன், பண்ணாரி ஆகிய இருவரும் காயமடைந்தனா். அங்கிருந்த வாகன ஓட்டிகள் 2 பேரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.