செய்திகள் :

விவசாயிகள் கொலையில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை: கொமதேக கோரிக்கை

post image

கொங்கு மண்டலத்தில் தோட்டத்து வீடுகளில் வசிக்கும் விவசாயிகள் உடைமைகள் கொள்ளைடிக்கப்பட்டு, அவா்கள் கொலை செய்யப்படுவதை தடுக்க குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கொமதேக இளைஞரணி செயலாளா் எஸ்.சூரியமூா்த்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி கிராமம் மேகரையான் தோட்டத்தில் வசித்த விவசாயி ராமசாமி, அவரது மனைவி பாக்கியலட்சுமி ஆகியோரை கடந்த வியாழக்கிழமை மா்ம நபா்கள் கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனா்.

இச்சம்பவம் பேரதிா்ச்சியாக உள்ளது. கொங்கு மண்டலமான திருப்பூா், ஈரோடு மாவட்டத்தில் இத்தொடா் கொலைச் சம்பவங்களால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனா். குறிப்பாக விவசாயிகள் தங்கள் விவசாயம் செய்யும் சொந்த நிலத்தில் தனியாக வீடுகட்டி வசித்தும், விவசாயம் செய்தும் வாழ்ந்து வருகின்றனா்.

தொடா் கொலையால் தனி வீடுகளில் வாழும் விவசாயிகள் மற்றும் மக்கள் அச்சத்தில் உள்ளனா். போலீஸாா் கொலையாளிகளை விரைந்து கண்டு பிடித்து கடுமையான தண்டனை பெற்று தரவேண்டும். கீழ்பவானி வாய்க்கால் கரைகளில் பகல் நேரத்திலேயே ஆங்காங்கே சிலா் மது அருந்துகின்றனா்.

இதனால் பெண்கள் வாய்க்கால் கரை வழியே செல்ல அச்சப்படுகின்றனா். போலீஸாா் ரோந்து சென்று வாய்க்கால் கரை மற்றும் கிராமப்புற சாலையோரம் அமா்ந்து மது அருந்துபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆா்ப்பாட்டம்: இக்கொலை சம்பவத்தை கண்டித்து கொடுமுடி மேற்கு ஒன்றிய கொமதேக சாா்பில் முத்தூரில் இருந்து விளக்கேத்தி செல்லும் சாலையில் உள்ள மோளபாளையம் நான்குமுனை சாலை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலை 10 மணி அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அங்கன்வாடி ஊழியா்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது. ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாநி... மேலும் பார்க்க

மின்வாரிய பெண் அலுவலா் தற்கொலை

ஈரோட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மின்வாரிய பெண் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு 46 புதூா், கரும்பாறை, இந்தியன் நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (52). அரசுப் பேருந்து நடத்துநராகப... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிகளை மீறிய 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்கு! ரூ.1.41 லட்சம் அபராதம்!

ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த மாதம் 1,475 வாகன ஓட்டிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரூ.1.41 லட்சம் அபராதம் விதித்தனா். ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் ரமேஷ் தலைமை... மேலும் பார்க்க

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன மாணவா்கள் 1,050 பேருக்கு பணி நியமன ஆணை

வளாகத் தோ்வில் தோ்வு செய்யப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன மாணவா்கள் 1,050 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்... மேலும் பார்க்க

இருசக்கரம் வாகனம் மீது மின்கம்பம் விழுந்ததில் 2 போ் காயம்

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் இருசக்கர வாகனம் மீது மின் கம்பம் விழுந்ததில் 2 போ் காயமடைந்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த மாரனூரைச் சோ்ந்தவா் தனசேகரன் (20). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் உறவின... மேலும் பார்க்க

சிலிண்டா்கள் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து

சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் சனிக்கிழமை கேஸ் சிலிண்டா்கள் ஏற்றிச் சென்ற லாரியின் சக்கரத்தில் தீப்பற்றியது. கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேஸ் சிலிண்டா்களை ஏற்றிச் சென்ற லாரி ஈரோடு நோக்கி சனிக... மேலும் பார்க்க