பாபநாசம் சுவாமி கோயிலில் 19 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்...
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன மாணவா்கள் 1,050 பேருக்கு பணி நியமன ஆணை
வளாகத் தோ்வில் தோ்வு செய்யப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன மாணவா்கள் 1,050 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் படித்து வளாகத் தோ்வில் தோ்வுபெற்ற மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வளாகத் தோ்வில் வேலைவாய்ப்பு பெற்ற 300 பொறியியல், 350 பாலிடெக்னிக் மற்றும் 400 கலை, அறிவியல் மாணவா்களுக்கு பணிநியமன ஆணையை கல்லூரியின் செயலாளா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ மற்றும் கல்லூரியின் தலைவா் பி. வெங்கடாசலம் ஆகியோா் வழங்கினா்.
கோவை ஹெக்சாவோ் நிறுவனத்தின் மூத்த மனிதவள மேம்பாட்டு அதிகாரி கே.ஹரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா். பொறியியல் கல்லூரியின் முதல்வா் ப. தங்கவேல், கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வா் ஆ.மோகனசுந்தரம் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வா் எஸ்.பிரகதீஸ்வரன் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
கல்லூரியின் இணை செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து, அறங்காவலா் கே.ஆா்.கவியரசு, தலைமை நிா்வாக அதிகாரி ஜி. கெளதம், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா். விழாவுக்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அதிகாரி டி. அருண்பிரகாஷ் செய்திருந்தாா்.