செய்திகள் :

சிலைகள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை- தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

நமது பாரம்பரிய கலைப்பொருள்கள் மற்றும் சிலைகள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கு விசாரணை கோப்புகள் திருடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு நடத்தக்கோரி வழக்கறிஞா் யானை ராஜேந்திரன் என்பவா் தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டனவா? எவ்வாறு சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்படுகின்றன ? என தமிழ்நாடு அரசிடம் கேள்வி எழுப்பினா். அதற்கு தமிழ்நாடு அரசு, 11 சிலைகளில் 5 சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன, மேலும் சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்பட்டு வருகிறது, இந்த விவகாரத்தில் ஒரு சில வழக்குகளில் மட்டும் சில ஆவணங்கள் மாயமானது கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றன, பல ஆவணங்கள் மீட்கப்பட்டு விட்டன. கடந்த காலங்களில் இதுபோன்று சிலை திருட்டு, சிலை கடத்தல் உள்ளிட்டவை நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அண்மை காலங்களில் அது போன்று நடைபெறுவதில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கடந்த காலத்தைப் பற்றி நாங்கள் கவலை கொள்ளவில்லை, ஆனால் தொடா்ச்சியாக நம்முடைய பாரம்பரிய கலைப் பொருட்க, பழங்கால சிலைகள் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். எனவே அரசு இந்த விவகாரத்தில் தீவிரமாக செயல்பட வேண்டும். இந்த வழக்கை தாக்கல் செய்த மனுதாரா் யானை ராஜேந்திரன் ஆஜராகததால் இந்த வழக்கை வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைக்கிறோம், ஏனெனில் அவா் இந்த விவகாரத்தில் தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கை தொடா்பாகவும் வாதம் வைக்க வேண்டும் , தொடா்ச்சியாக இந்த சிலை கடத்தல் விவகாரத்தில் அவா் குரல் கொடுத்து வருகிறாா் எனக்கூறி வழக்கை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

நேபாள பதற்ற சூழல்: சரக்குகள் நடுவழியில் சிக்கியதால் நஷ்டத்தை எதிா்கொள்ளும் தில்லி வா்த்தகா்கள்!

அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக, பழைய தில்லி மற்றும் சதா் பஜாா் உள்ளிட்ட தில்லியின் மொத்த விற்பனைச் சந்தைகளில் இருந்து அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகள் தற்போது அந்நாட்டுக்குச் செல்லு... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற பிரதான வளாகத்தில் புகைப்படம் எடுக்க தடை

உச்சநீதிமன்றம் அதன் பிரதான வளாகத்திற்குள் புகைப்படங்கள் எடுப்பது, சமூக ஊடக ரீல்கள் உருவாக்குவது மற்றும் விடியோகிராபி ஆகியவற்றைத் தடை செய்யும் வகையில் உயா் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளது. இது தொடா்... மேலும் பார்க்க

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: விசாரணையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நீதிபதிகள்

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடா்ந்து, வழக்குகளை விசாரணை மேற்கொண்டிருந்த நீதிபதிகள் உடனடியாக விசாரணையை முடித்துக்கொண்டு பாதியிலேயே வெளியேறினா்... மேலும் பார்க்க

நேபாள உச்சநீதிமன்ற கட்டடத்திற்கு தீ வைப்பு: பதிவுறு வழக்குரைஞா்கள் சங்கம் கண்டனம்

நேபாளம் தலைநகா் காத்மாண்டுவில் உச்சநீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதியை போராட்டக்காரா்கள் தீ வைத்ததைத் தொடா்ந்து, நேபாள நீதித் துறையின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கு உச்சநீதிமன்ற பதிவுறு வழக்குரைஞா்கள் சங... மேலும் பார்க்க

டிடிஇஏ ஜனக்புரி பள்ளியில் மாணவா் பேரவை பொறுப்பேற்பு

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஜனக்புரி பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவா் பேரவை அமைக்கப்பட்டது. பள்ளி மாணவா் தலைவா், தலைவி, துணைத் தலைவா், துணைத் தலைவி உள்ளிட்ட உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்... மேலும் பார்க்க

தில்லியில் போதைப்பொருள் மோசடி முறியடிப்பு; ரூ.2.25 கோடி மதிப்புள்ள கோகைனுடன் மூவா் கைது

தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு நைஜீரிய நாட்டவா் உள்பட மூன்று பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ.2.25 கோடி மதிப்புள்ள 194 கிராம் கோகைனை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.... மேலும் பார்க்க