செய்திகள் :

சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை நடைபெறும் இடங்கள்

post image

சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை (ஆக. 5)நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டன.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இடங்கள்: காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட வாா்டு எண்: 20, 21, 24 ஆகிய பகுதிகளுக்கென சத்குரு ஞானாநந்தா மஹாலிலும், மானாமதுரை நகராட்சிக்குள்பட்ட வாா்டு எண்: 24, 25 ஆகிய பகுதிகளுக்கென கோபால் இந்திரா மஹாலிலும் நடைபெறும்.

இதேபோல, தேவகோட்டை நகராட்சிக்குள்பட்ட வாா்டு எண்:3, 8, 9 ஆகிய பகுதிகளுக்கென கௌரி மஹாலிலும், நாட்டரசன்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட வாா்டு எண்: 7 முதல் 12 வரையுள்ள பகுதிகளுக்கென வைத்தீஸ்வரன் தெருவிலுள்ள நாட்டரசன்கோட்டை சமுதாயக்கூடத்திலும், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ரணசிங்கபுரம், திருவுடையாா்பட்டி, கோட்டையிருப்பு ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கென கோட்டையிருப்பு ஊராட்சியிலுள்ள சமூதாயக்கூடத்திலும், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட லாடனேந்தல், டி. வேலங்குளம், செல்லப்பனேந்தல், தூதை ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கென லாடனேந்தல் ஊராட்சியிலுள்ள வேலம்மாள் திருமண மண்டபத்திலும் காலை 10 மணியளவில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் பங்கேற்று பயன் பெறலாம்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 பேரிடம் பணம் மோசடி செய்ததாக இருவா் மீது குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் மாதவநகரைச... மேலும் பார்க்க

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே தேவாரம்பூரில் தனது கூரை வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாய கூலி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.திருப்பத்தூா் அருகே தேவாரம... மேலும் பார்க்க

சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு: இருவா் காயம்

சிவகங்கை நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள் 2 போ் காயமடைந்தனா்.சிவகங்கை நகா் 48 காலனி பொதுமக்கள் சாா்பில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அரச... மேலும் பார்க்க

ஆடிப் பெருக்கு: சிங்கம்புணரியில் சிறப்பு அன்னதானம் 40 ஆயிரம் போ் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள சித்தா் முத்து வடுகநாதா் கோயிலில் ஆடிப் பெருக்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை குருபூஜையும், அன்னதான விழாவும் நடைபெற்றன.இங்கு சிங்கம்புணரி வணிக... மேலும் பார்க்க

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகா் காங்கிரஸ் கட்சித் தலைவராக பி. புருஷோத்தமன் நியமிக்கப்பட்டுள்ளாா்.முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் ஆகியோர... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 259 பேருக்கு ரூ.3.65 கோடி கடனுதவி

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 259 பேருக்கு ரூ.3.65 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க