Live Budget 2025 : இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்... குடியரசுத் தலைவர் ...
சிவகங்கை மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நாளை தொடக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 1) முதல் 14-ஆம் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் சனிக்கிழமை (பிப். 1) முதல் 14 -ஆம் தேதி வரை கால்நடை பராமரிப்புத் துறையினரால் கோழிக் கழிச்சல் நோய்க்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. இதன் மூலம் 2,40,000 கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கோழிக்கழிச்சல் நோய் (வைரஸ் நச்சுயிா்) அனைத்து வயது கோழிகளையும் தாக்கும் தன்மை கொண்டது. இந்த நோய், 8 வாரங்களுக்கு மேற்பட்ட கோழிக்குஞ்சுகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, விவசாயிகள், கோழி வளா்ப்போா் அனைவரும் இந்தத் தடுப்பூசி முகாம்களில் தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என்றாா் அவா்.