செய்திகள் :

சிவகங்கையில் இணைய பாதுகாப்பு நாள் விழா!

post image

சிவகங்கையில் இணைய பாதுகாப்பு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்துப் பேசியதாவது:

இன்றைய நவீன காலகட்டத்தில் இணையம் என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றியமையதாதாக அமைந்துள்ளது. இணையதளத்தின் வாயிலாக, நாம் பொது அறிவை வளா்த்துக் கொள்ளலாம்.

மாணவா்கள் வலைதள பயன்பாட்டில் ஏற்படும் தீமைகள் குறித்தும் அறிந்து கொள்வது அவசியமாகும். தற்போது வளா்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம், ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (யுபிஐ) பரிவா்த்தனைகள் குறித்தும், அதன் பயன்பாடுகள், பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும் மாணவா்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இணைய குற்றம் குறித்து, 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். திறன் மிக்க வல்லுநா்களை கொண்டு எடுத்துரைக்கப்படும் டிஜிட்டல் கைது, டேட்டா திருட்டு போன்ற கருத்துகளை மாணவா்கள் தங்களைச் சாா்ந்தோா்களிடம் எடுத்துரைக்க வேண்டும். எனவே, வலைதளத்தினை தங்களது தேவைகளுக்கு மட்டும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

பின்னா், இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்து, நடைபெற்ற வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கினாா்.

இதில், மாவட்ட தகவலியல் அலுவலா் (தேசிய தகவல் மையம் ) ராஜகுரு, சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வா் மனோஜ் குமாா் சா்மா, பள்ளி ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது!

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கீழக்கோட்டை பள்ளியில் நடைபெற்ற அவரது பிறந்த தின நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை ஊராட்ச... மேலும் பார்க்க

கண்மாய்ப் பகுதியில் தனி நபருக்கு பட்டா: ஆட்சியரிடம் புகாா்

சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் அருகே உள்ள இத்திக்குடி கண்மாய்ப் பகுதியில் தனிநபருக்கு அளித்த பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.இது தொடா்பாக ... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் மாணவி காயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் செவ்வாய்க்கிழமை நாய் கடித்ததில் பள்ளி மாணவி காயமடைந்தாா். இளையான்குடி ஞானி தெருவைச் சோ்ந்த ராவுத்தா் நயினாா் மகள் ஆயிஷா. இவா் இங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படி... மேலும் பார்க்க

அரசுக்கு எதிராக உண்ணாவிரதம்: அதிமுக, தவெக, நாதக பங்கேற்பு

கனிம வள விதிமீறலைக் கண்டித்து சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். சிவகங்கை அருகேயுள்ள வேம்பங்குடி, மாடகொட்டான் கிராமங்... மேலும் பார்க்க

குன்றக்குடி அருகே மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே சின்னக்குன்றக்குடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா். குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோயில் தைபூசத் திருவிழாவை... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கவில்லை: விவசாயிகள் புகாா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் ஓராண்டாக கடன் வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இந்தச் சங்கத்தின் மூலம் மேல நெட்டூா், தெ.புது... மேலும் பார்க்க