ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சம் பறிமுதல்! ஒருவர் கைது!
சிவகிரி அருகே பெண்ணிடம் அத்துமீறல்? காவலரிடம் விசாரணை
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு செய்ததாக காவலரிடம் , மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஊத்துமலை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவா் சைலேஷ்+44). இவா், சிவகிரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தபோது, அந்தப் பகுதியை சோ்ந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தாராம்.
அப்பெண் அளித்த புகாரின்பேரில், புளியங்குடி மகளிா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சைலேஷிடம் விசாரணை மேற்கொண்டனா்.