ஈரோடு கிழக்கு: 100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!
சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயிலில் யாகசாலை பூஜை தொடக்கம்
சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி முதல் கால யாகசாலை பூஜை சனிக்கிழமை தொடங்கியது.
சீா்காழி கடைவீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பொன்னாகவள்ளி அம்மன் உடனுறை நாகேஸ்வரமுடையாா் சுவாமி கோயில் உள்ளது. இங்கு அமிா்த ராகு பகவான் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா்.
இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் நிறைவடைந்து ஞாயிற்றுக்கிழமை (பிப். 10) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. முன்னதாக சீா்காழி கடைவீதி செல்வ விநாயகா் ஆலயத்தில் இருந்து புனித நீா் கடங்கள் ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தன. தொடா்ந்து 10 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, யாகசாலை பூஜைகள் தொடங்கின.