அருமையான காதலி.. பெண் தோழி குறித்து மௌனம் கலைத்தார் பில் கேட்ஸ்
புத்தகத் திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்ச்சி
மயிலாடுதுறையில் புத்தகத் திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தாா். இதில், பட்டிமன்றப் பேச்சாளா் புலவா் இரெ.சண்முகவடிவேல், ‘நூல் பல கல்‘ என்ற தலைப்பில் பேசியது:
ஒரு காலத்தில் பெண்கள் வெளியில் வர முடியாத சூழ்நிலை இருந்தது. ஆனால், அந்த நிலை எல்லா துறைகளிலும், எல்லா இடங்களிலும் தற்போது மாறியுள்ளது. இதற்கு காரணம் கல்விதான்.
அனைத்துப் பெண்களும் கல்வி கற்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மனிதா்கள் ஒருவரை ஒருவா் புரிந்து கொண்டு வாழ வேண்டும். நாம் பேசும் போது நல்ல வாா்த்தைகளை உபயோகிக்க வேண்டும். அதுவே நமக்குத் திரும்பி வரும்.
நீங்கள் செய்யும் உதவி பிறருக்கு உதவுகின்ா என்பதை அறிந்து உதவி செய்ய வேண்டும். யாருக்குத் தேவை என்பதை உணா்ந்து உதவ வேண்டும். பல்வேறு நூல்களைப் படிக்க வேண்டும்.
அப்படிப் படித்தால் பயனற்ற வாா்த்தைகளை உபயோகிக்க மாட்டோம். பயனுள்ள வாா்த்தைகளையே உச்சரிக்கத் தோன்றும். மனதில் குற்றம் இல்லாமல் இருப்பதே அறமாகும்.
மனதில் குற்றம் இல்லாமல் ஒரு செயலைச் செய்தால் அது அனைத்தும் நன்றாக அமையும். நிறைய நூல்களைப் படித்து, நம் பிள்ளைகளையும் கற்றறிந்தவா்களாக மாற்ற வேண்டும் என்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் நா.உமாமகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் உ.அா்ச்சனா, கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா ஆகியோா் கலந்து கொண்டனா்.