நெல்லை: ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோயில் திருக்கல்யாணம்; திரளான பக்தர்கள் சாமி த...
சுனிதா வில்லியம்ஸின் ஊதியம் எவ்வளவு தெரியுமா?
9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் செவ்வாய்க்கிழமை மாலை பூமி திரும்பவுள்ளார்.
வெறும் 9 நாள்கள் பயணமாக விண்வெளி மையத்துக்கு சென்ற நாசா விஞ்ஞானிகள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோா் ஆகியோர், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
நீண்ட முயற்சிகளுக்கு பிறகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தது. இதன்மூலம் இன்றிரவு பூமிக்கு புறப்படும் சுனிதா வில்லியம்ஸ் நாளை மாலை வந்தடைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் எவ்வளவு?
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோா் ஆகியோரின் ஊதியம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாசா விஞ்ஞானியான சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க அரசின் பொது அட்டவணையில் மிக அதிக ஊதியம் பெறும் ’ஜிஎஸ்-15’ என்ற தரப் பணியாளர் ஆவார்.
ஜிஎஸ்-15 தரப் பணியாளர்களின் ஆண்டு ஊதியமானது, 125,133 அமெரிக்க டாலர்கள் - 162,672 டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பின்படி, ரூ. 1.08 கோடி முதல் ரூ. 1.41 கோடியாகும்.
இதையும் படிக்க : பூமிக்கு வரும் சுனிதா வில்லியம்ஸ்! நடக்க முடியுமா? வேறென்ன சிக்கல்கள் ஏற்படும்?
இதனிடையே, சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்த காலகட்டத்துக்கு சுனிதா வில்லியம்ஸுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊதியம் குறித்து முன்னாள் விண்வெளி வீரர் கேடி கோல்மன் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு மிக குறைந்த அளவிலான சிறப்பு ஊதியமே வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவர், 2010-11 காலகட்டத்தில் விண்வெளியில் இருந்த 159 நாள்களுக்கு மொத்தமாக 636 டாலர்கள் மட்டுமே சிறப்பு ஊதியமாக பெற்றதாக தெரிவித்துள்ளார்.
அதாவது, நாளொன்றுக்கு 4 டாலர்கள்(ரூ. 347) சிறப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. இதேபோல், 4 டாலர்கள் வழங்கப்படும் பட்சத்தில், சுனிதா மற்றும் பட்ச தங்கியிருந்த 287 நாள்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும்.
இதன்படி, சுனிதா வில்லியம்ஸின் கடந்த 9 மாத சம்பளம் மட்டும் சிறப்பு ஊதியத்துடன் சேர்த்து, ரூ. 82 லட்சத்தில் இருந்து ரூ. 1.06 கோடி வரை ஊதியமாக பெறவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூமி திரும்பும் 4 வீரர்கள்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் ஆகியோருடன் டிராகன் விண்கலத்தில் மேலும் இரண்டு விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பவுள்ளனர்.
மார்ச் 17ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சரியாக மார்ச் 18ஆம் தேதி மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தையொட்டி கடல் பகுதிக்கு டிராகன் விண்கலம் வந்துசேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.