செய்திகள் :

சூப்பர் ஸ்டாரா? அஜித் அளித்த பதில்!

post image

நடிகர் அஜித் குமார் பத்ம பூஷண் விருது மற்றும் தன் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நேற்று முன்தினம் (ஏப். 28) தில்லியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார்.

நடிகர், கார் ரேஸர் என இரண்டு துறைகளில் சவாரி செய்யும் அஜித் பத்ம பூஷண் விருது பெற்றதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விருதைப் பெற்றதும் பிரபல ஆங்கில செய்தி சேனலுக்கு அஜித் நேர்காணல் அளித்தார்.

அதில் பேசிய அஜித், “இன்னும் என் மனதளவில் மிடில் கிளாஸ் ஆளாகவே இருப்பதால் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்தது இந்த அனுபவங்களைப் பெற்றது எல்லாம் நம்ப முடியாததாகவே இருக்கிறது. விருதிற்காக இந்திய அரசிற்கு, பிரதமர், குடியரசுத் தலைவர், நண்பர்கள் மற்றும் என் குடும்பம் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்த விருது அறிவிக்கப்பட்டபோது நெகிழ்ச்சியாக இருந்தது. இதுபோன்ற விருதுகள் நாம் சரியான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துகின்றன.

நான் ஒரு நடிகர். இதுவும் ஒரு வேலைதான். இதற்காக, நான் சம்பளமும் பெறுகிறேன். புகழும் செல்வமும் இதன் துணை பொருள்களாக அமைந்துவிடுகின்றன. சூப்பர் ஸ்டார் போன்ற பட்டங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. என்னை அஜித் அல்லது ஏகே என்று அழைப்பதை பரிந்துரைக்கிறேன். என் துறையில் 33 ஆண்டுகளாக விருப்பதுடன் பணியாற்றி வருகிறேன். என்னால் முடிந்த அளவிற்கு என் வாழ்க்கையை எளிமையாக வைத்திருக்கவே முயற்சித்து வருகிறேன்.

என் மனைவி ஷாலினி எனக்காக பல தியாகங்களைச் செய்திருக்கிறார். அவரும் பிரபலமானவர். நிறைய ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால், பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டு என் வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்துவிட்டார். என் கடினமான காலகட்டத்தில் நான் எடுத்த தவறான முடிவுகளிலும் எனக்கு உறுதுணையாக இருந்தார். என்னுடைய சாதனைகளில் ஷாலினிக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. சொல்லப்போனால், இப்படியெல்லாம் என் வாழ்க்கை அமைந்தது கனவில் வாழ்வதுபோல் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஒளரங்கசீப்பை அறைவேன்: ரெட்ரோ விழாவில் விஜய் தேவரகொண்டா சர்ச்சைப் பேச்சு!

டிக்கெட் முன்பதிவில் அசத்தும் ரெட்ரோ!

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்துக்கான டிக்கெட்கள் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரெட்ரோ திரைப்படத்த... மேலும் பார்க்க

நீதிபதி மகனைத் தாக்கிய விவகாரம்: தர்ஷனுக்கு எதிரான வழக்கு ரத்து!

நீதிபதி மகனைத் தாக்கிய விவகாரத்தில் நடிகர் தர்ஷனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன் தர்ஷன் வீட்டின் முன்பு உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் காரை நிறுத்திவி... மேலும் பார்க்க

குக் வித் கோமாளி - 6 ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால் இந்நிகழ்ச்சிக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிக... மேலும் பார்க்க

ரூ. 18 கோடியாக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா?

நடிகை நயன்தாரா தெலுங்கு படமொன்றில் நடிக்க தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா ஆண்டிற்கு 3 படங்களிலாவது நடித்துவிடுகிறார். அதில், உச்ச நட்சத்திர நடி... மேலும் பார்க்க

சித்திரைத் தேரோட்டம்: தஞ்சைப் பெரிய கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம்!

உலக புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் வெகு விமர்சையாக நடைபெற்றது.உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் 18 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவி... மேலும் பார்க்க

டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர்!

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.நடிகர் சந்தானம் டிடி ரிட்டன்ஸின் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் (DD next level) படத்தில் திரை விமர்சகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள... மேலும் பார்க்க