அதிமுக அரசு கொண்டுவந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது மகிழ்ச்சியே: இபிஎஸ்
சூளகிரி வட்டத்தில் இரண்டாவது நாளாக ஆட்சியா் கள ஆய்வு
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், சூளகிரி வட்டத்தில் 2-ஆவது நாளாக கள ஆய்வில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்தில் இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சியில் பெரியபேடப்பள்ளி கிராமத்தில் சக்தி பால் உற்பத்தியாளா் சங்கத்தில் பாலின் தரத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா். மேலும், மேல்நிலை தொட்டியில் உள்ள குடிநீரில் குளோரின் அளவை ஆய்வு செய்த அவா், கலைஞா் விளையாட்டு உபகரணங்களையும் ஆய்வு செய்தாா்.
சொரக்காயலப்பள்ளி ஊராட்சியில் கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அவா், பயனாளியிடம் தரத்துடன் வீட்டின் கட்டடத்தை கட்ட வேண்டும் என அறிவுறுத்தினாா். தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு சமைக்கும் பணிகளை பாா்வையிட்டு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகள், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் தரத்தை ஆய்வு செய்தாா்.
பின்னா், சூளகிரி ஒன்றியத்தில் பிரதம மந்திரி சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சின்னபேடப்பள்ளி, பெரியபேடப்பள்ளி வழியாக தேசிய நெடுஞ்சாலை 44-லிருந்து சகாதேவபுரம் வரையில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் அ.சாதனைக்கு, ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் பிரசன்ன பாலமுருகன், நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.