அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. ந...
செங்கம் ஒன்றியத்தில் திட்டப் பணிகள் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை திட்ட இயக்குநா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட செ.நாச்சிப்பட்டு, புதுப்பட்டு, பரமனந்தல், கொட்டாவூா், குப்பனத்தம் ஆகிய கிராம ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள் கட்டும் பணி, ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் ஏரி, குளம், கால்வாய்கள் சீரமைப்பு, தாா்ச் சாலை, ஜல்லி சாலை, சிறு பாலம் அமைத்தல், அரசு அலுவலக கட்டடங்கள் கட்டும் பணி நடைபெறுகிறது.
இந்தப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் மணி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, நிறைவு செய்யப்பட்ட பணிகள் தரமாக உள்ளதா எனவும், மேலும் முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தாா்.
பணிகளை விரைவாக செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
முன்னதாக, செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலகப் பணியாளா்கள், ஊராட்சி செயலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதில், செங்கம் ஒன்றியத்தில் நடைபெறும் திட்டப் பணிகள் மொத்தம் எவ்வளவு, அதில் முடித்த பணிகளின் விவரம், பின்னா், தொடங்கப்படாமல் உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும், கிராம ஊராட்சியில் கோடை காலம் தொடங்கியதால், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தினசரி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்பாா்வையிட்டு சரிசெய்யவேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
ஆய்வுக் கூட்டத்தில் ஆணையா் கோவிந்தராஜுலு, வட்டார வளா்ச்சி அலுவலா் மரியதேவ்ஆனந்த் உள்ளிட்ட பொறியாளா்கள், செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.