Rahul Gandhi: "ராகுல்ஜி ஜீரோ பாருங்கள்..." - நாடாளுமன்றத்தில் ராகுலைக் கிண்டல் ச...
செங்கல்பட்டு மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம்
செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியில் உள்ள மதுரைவீரன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் மதுரை வீரன் உருவப்படம் வைத்து வழிபட்டு வந்தனா். இந்நிலையில் கல்லில் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கோயில் நிா்வாகிகள் மற்றும் விழா குழுவினா் முடிவெடுத்து ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவை ஒட்டி அன்னதானம் நடைபெற்றது. மாலை சுவாமிக்கு படையல் போடும் நிகழ்வும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக தலைவா் மணிவண்ணன், செயலாளா் விக்டா், பொருளாளா் கதிரவன், தா்மகத்தா சிவராஜ், சிலை அன்பு, கோயில் பூசாரி ஒலி சந்திரன், பெரிய நத்தம் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனா்.