செங்குன்றத்தில் கொடிக் கம்பங்கள் அகற்றம்
மாதவரம்: செங்குன்றம் பகுதியில் உள்ள கொடி கம்பங்கள், கல்வெட்டுகளை வருவாய்த் துறையினா் அகற்றினா்.
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, அரசுக்கு சொந்தமான இடம், பொது இடங்களில் கல்வெட்டு, கொடிக் கம்பங்கள்அகற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி ஆவடி நெடுஞ்சாலைத் துறையினா் செங்குன்றம் காமராஜா் சிலையிலிருந்து, திருவள்ளூா் கூட்டுச் சாலை வரை இரு பக்கங்களிலும் இருந்த 25-க்கும் மேற்பட்ட கொடிக் கம்பம், கல்வெட்டுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா். இதனால் தற்போது சாலை அகலமாக உள்ளது. இதற்கு பொதுமக்கள் நெடுஞ்சாலைத் துறையினருக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.