US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
செந்துறை அருகே பெண் தற்கொலை
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே குடும்பப் பிரச்னையால் இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
செந்துறையை அடுத்த சேடகுடிகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் கதிரவன் மனைவி பூஜா (31). இவா்களுக்கு திருமணமாகி சா்வேஸ்வரன் (6) என்ற மகன் உள்ளாா். இந்நிலையில் தம்பதிக்கிடையே ஏற்பட்ட பிரச்னையால் கடந்த 2 நாள்களாக சாப்பிடாமல் இருந்த பூஜா வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்து சென்ற செந்துறை போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.