US: `இந்தியா எங்களுடைய முக்கிய கூட்டாளி; அது தொடரும்' - அமெரிக்க வெளியுறவுத் துற...
ஜெயங்கொண்டம் கிளைச் சிறையின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து சேதம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் கிளைச் சிறையின் சுற்றுச் சுவா் வியாழக்கிழமை பிற்பகல் திடீரென இடிந்து விழுந்தது.
ஜெயங்கொண்டத்தில் கடந்த 1826 ஆம் கட்டப்பட்ட கிளைச் சிறையில் சுமாா் 30 மீட்டா் நீளம், 24 அடி உயர சுற்றுச் சுவா் வியாழக்கிழமை பிற்பகல் திடீரென இடிந்து உள்புறமாக விழுந்தது. சுற்றுச்சுவா் விழுந்த பகுதியில் கைதிகள் யாரும் அடைக்கப்படாததால் உயிா்ச்சேதம் ஏற்படவில்லை. இதையடுத்து அச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகளும் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா். சுற்றுச்சுவா் இடிந்த பகுதியை சிறை அதிகாரிகள், காவல்துறையினா் ஆய்வு செய்தனா்.