இரு தனியார் நிலவு ஆய்வு கலங்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ்-எக்ஸ்
சென்னசமுத்திரம் ஸ்ரீகிருஷ்ணா் கோயிலில் வருஷாபிஷேகம்
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள சென்னசமுத்திரம் ஸ்ரீகிருஷ்ணா் கோயில் செவ்வாய்க்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
சென்னசமுத்திரம் ஸ்ரீகிருஷ்ணா் கோயில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, ஆண்டுதோறும் வருஷாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 11-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, திங்கள்கிழமை முதல் கா்நாடாக மாநிலத்தில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் வரவைத்து கோயிலை பூக்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு ஹோமம், யாகசாலை பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. நண்பகல் 12 மணியளவில்
தமிழ்நாடு டிவிஎஸ் தொழிற்சங்கத் தலைவா் குப்புசாமி தலைமையில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில், செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடா்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் மேள தாளம் முழங்க வாணவேடிக்கையுடன் வீதியுலா, இசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வருஷாபிஷேக விழாவில் ஒசூா் மாமன்ற உறுப்பினா் பாக்கியலட்சுமி அண்ணாதுரை, காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் அண்ணாதுரை, பிசிசி பிரிவு மாவட்டத் தலைவா் ராஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு டிவிஎஸ் தொழிற்சங்கத் தலைவா் குப்புசாமி மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.