செய்திகள் :

சென்னை: ஒரே வீட்டை 2 பேருக்கு லீசுக்குக் கொடுத்த உரிமையாளர்; ரூ.15 லட்சம் மோசடி வழக்கில் கைது

post image

சென்னை, அண்ணா நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் இணையதளம் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அயனாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு தேடியிருக்கிறார்.

அப்போது அயனாவரம், பாரதி நகரில் குடியிருக்கும் சிவகுமார் என்பவர் ரூ.15 லட்சத்துக்கு வீடு லீசுக்கு இருப்பதாக விளம்பரம் கொடுத்திருப்பதை மணிகண்டன் பார்த்திருக்கிறார்.

பின்னர் சிவகுமாரை நேரில் சந்தித்து மணிகண்டன் வீடு கேட்டிருக்கிறார். அப்போது வீட்டில் வாடகைக்கு ஆள் இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் சில மாதங்களில் காலி செய்துவிடுவார்கள். அதன்பிறகு அந்த வீட்டை உங்களுக்கு லீசுக்குக் கொடுக்கிறேன். அதற்கு முன்பு வீடு லீசுக்காக 15 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என மணிகண்டனிடம் சிவகுமார் கூறியிருக்கிறார்.

அதற்குச் சம்மதித்த மணிகண்டன், சிவகுமார் கூறியது போல ஒப்பந்தம் போட்டு சிவகுமாரிடம் மணிகண்டன் பணத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த வீட்டை லீசுக்கு மணிகண்டனிடம் சிவகுமார் கொடுக்கவில்லை.

குத்தகை வீடு
குத்தகை வீடு

அதனால் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு சிவகுமாரைச் சந்தித்து பணத்தைத் திரும்பக் கேட்டிருக்கிறார். அதனால் சிவகுமார் பல்வேறு தவணைகளாக ரூ.4.5 லட்சத்தை மட்டும் திரும்பக் கொடுத்திருக்கிறார். மீதி பணம் ரூ.10.5 லட்சத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார்.

அதனால் சிவகுமாரைச் சந்தித்து மணிகண்டன் பணம் கேட்டபோது, பணத்தைத் தர முடியாது என மிரட்டியிருக்கிறார் சிவகுமார். இதையடுத்து கடந்த 14.07.2025-ம் தேதி அயனாவரம் குற்றப்பிரிவில் மணிகண்டன், வீட்டின் உரிமையாளர் சிவகுமார் மீது மோசடி புகார் ஒன்றைக் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸார் சிவகுமாரை விசாரணைக்கு அழைத்து விசாரித்தனர். விசாரணையில் சிவகுமார் பணம் வாங்கியது உண்மையெனத் தெரிந்தது. அதைத் தொடர்ந்து சிவகுமார் செய்த மோசடி வேலையும் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து அயனாவரம் குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``சென்னை கிருகம்பாக்கத்தில் குடியிருக்கும் சிவகுமார் தனக்குச் சொந்தமான அயானவரம் வீட்டைத் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் அடமானம் வைத்திருக்கிறார். அதில் கிடைத்த பணத்தைத் தொழிலில் முதலீடு செய்த சிவகுமாருக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

மோசடி
மோசடி

அதனால் அடமானம் வைத்த வீட்டின் கடனைச் செலுத்த முடியாமல் சிவகுமார் சிரமப்பட்டிருக்கிறார். அதனால்தான் அந்த வீட்டை லீசுக்குக் கொடுக்க சிவகுமார் திட்டமிட்டு இணையதளத்தில் விளம்பரம் செய்திருக்கிறார். அதன்படி ஒருவருக்கு வீட்டை லீசுக்கு விட்டிருக்கிறார்.

அதன்பிறகு அதே விளம்பரத்தைப் பார்த்து மணிகண்டன் என்பவர் வீட்டை லீசுக்குக் கேட்டிருக்கிறார். அவரிடமும் பணத்தை வாங்கிய சிவகுமார், மணிகண்டனை ஏமாற்றி வந்திருக்கிறார். ஒரே வீட்டை இரண்டு பேரிடம் லீசுக்குக் கொடுப்பதாகக் கூறி, பணம் மோசடி செய்த சிவகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

பல்லடம் மூவர் கொலை வழக்கு: 8 மாதங்களுக்குப் பின் கிணற்றில் இருந்து செல்போன் மீட்பு!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன்புதூர் தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி வீட்... மேலும் பார்க்க

திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்; 4 நாள்களுக்குப் பிறகு 3 பேர் கைது!

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில... மேலும் பார்க்க

குழித்துறை: நைட்டி அணிந்து பொருட்காட்சியில் ஆட்டம்; வில்லங்க செயலால் போலீஸில் சிக்கிய இளைஞர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மைதானத்தில் குழித்துற... மேலும் பார்க்க

நாமக்கல்: தனியார் பள்ளி பஸ் டிரைவர் அடித்துக் கொலை; சரக்கு லாரி டிரைவரைக் கைதுசெய்த போலீஸ்!

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வையநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (45). இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; பண மோசடி - ஜிம் பயிற்சியாளர் சிக்கிய பின்னணி!

சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 28 வயதாகும் இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், அசோக் நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அங்கு ப... மேலும் பார்க்க

மருத்துவமனையில் நுழைந்து நோயாளி சுட்டுக் கொலை; திரைப்பட பாணியில் நடந்தேறிய கொடூரம்- பீகார் அதிர்ச்சி

பீகாரில் கடந்த ஒரு மாதத்தில் அடுத்ததடுத்து படுகொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சம்பவத்திலும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க பிரமுகர், தொழிலதிபர் என கொலைகள் பட்டியல் நீண்டுகொண்... மேலும் பார்க்க