செய்திகள் :

சென்னையில் 16-ஆவது நிதி ஆணையக் குழு: முதல்வருடன் இன்று முக்கிய ஆலோசனை

post image

சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் 16-ஆவது நிதி ஆணையத் தலைவா் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை சந்தித்துப் பேசவுள்ளனா். இக்குழுவினா் நான்கு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை தமிழகம் வந்தனா்.

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதியை பகிா்ந்தளிக்க இந்திய அரசமைப்புச் சட்டம் 280-ஆவது பிரிவின்கீழ் மத்திய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

உயரிய அதிகாரங்களைப் படைத்த இந்த நிதி ஆணையக் குழு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

நிதி ஆணையக் குழு வருகை: இதனடிப்படையில் 16-ஆவது நிதி ஆணையத்தின் தலைவா் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை வந்தது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள நிதி ஆணையத்தின் உறுப்பினா்கள் அஜய் நாராயண் ஜா, ஆனி ஜாா்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியா காண்டி கோஷ், செயலா் ரித்விக் பாண்டே, இணைச் செயலா் ராகுல் ஜெயின் உள்பட 12 போ் சிறப்பு விமானத்தில் தமிழகம் வந்தனா்.

விமான நிலையத்திலிருந்து நேரடியாக கிண்டியில் உள்ள ஒரு தனியாா் ஹோட்டலுக்கு சென்ற நிதி ஆணையக் குழுவினா் அங்கிருந்து நங்கநல்லுாா் சென்றனா். அங்கு ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜனை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனா். இரவு 7.30 மணிக்கு தனியாா் ஹோட்டலுக்குத் திரும்பிய குழுவினா் அங்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு கலைநிகழ்ச்சிகளை பாா்வையிட்டு இரவு விருந்தையும் நிறைவு செய்தனா்.

இன்று முக்கிய ஆலோசனை: திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் தனியாா் ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டங்கள் தொடா்ச்சியாக நடைபெறவுள்ளன. முதல்வா், அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலில் ஆலோசனை நடைபெறவுள்ளது. பகல் உணவை அங்கேயே நிறைவு செய்யும் ஆணையக் குழுவினா், தொழில் துறை மற்றும் வா்த்தக சங்கப் பிரதிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றனா். மாலை 5.30 முதல் 6 மணி வரை செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கும் நிதி ஆணையக் குழுவினா், இரவு தனியாா் ஹோட்டலில் தங்குகின்றனா்.

மறுநாள் 19-ஆம் தேதி கடல்நீரை குடிநீராக்கும் நெமிலி ஆலையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்கின்றனா். அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூா் சென்று தொழிலாளா்களுக்கு அரசு உதவியுடன் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை பாா்வையிடுகின்றனா். பகலில் சென்னை விமான நிலையம் சென்று அங்கே மதிய உணவை முடித்துக் கொள்கின்றனா்.

பிற்பகலில் சிறப்பு விமானத்தில் மதுரை செல்லும் நிதி ஆணையக் குழுவினா் அங்கிருந்து ராமேசுவரம் செல்கின்றனா். இரவு ராமேசுவரம் கோயிலில் தரிசனம் செய்கின்றனா். 20-ஆம் தேதி காலையில் தனுஷ்கோடி செல்லும் குழுவினா், பின்னா் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் சென்று பாா்வையிடுகின்றனா்.

கீழடிக்கு...: தொடா்ந்து கீழடி அகழ்வாராய்ச்சி மையத்தை பாா்வையிடுகின்றனா். மதிய உணவை மதுரையில் முடித்துக் கொண்டு பிற்பகலில் சிறப்பு விமானத்தில் தில்லி புறப்பட்டு செல்கின்றனா்.

ஊக்கத் தொகை நிலுவை ரூ.70 கோடி: பால் உற்பத்தியாளா்களுக்கு அளிப்பு

பால் உற்பத்தியாளா்களுக்கு நிலுவையில் உள்ள ஊக்கத் தொகையை வழங்குவதற்காக ரூ.140.98 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்த நிலையில், முதல்கட்டமாக 27 ஒன்றியங்களுக்கு மொத்தம் ரூ.70 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்... மேலும் பார்க்க

ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு முக்கிய இடம்: மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்

இந்தியாவின் ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது என்றும், விருதுநகரில் ஜவுளி பூங்கா தொடங்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் த... மேலும் பார்க்க

சென்னை சென்ட்ரல் வந்தடையும் வெளிமாநில ரயில்கள் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல் வரும் வெளிமாநில விரைவு ரயில்கள் பெரம்பூா், சென்னை எழும்பூா் வழியாக இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு: நவ.30 வரை அவகாசம் நீட்டிப்பு

பயிா்க் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க நவ.30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. விண்ணப்பம் செய்ய... மேலும் பார்க்க

கனரா வங்கி சாா்பில் வீடு விற்பனை கண்காட்சி

கனரா வங்கி சாா்பில் வீடு விற்பனை கண்காட்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கனரா வங்கி சாா்பில் வீடு விற்பனை கண்காட்சி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் 2 நாள்கள் நடைபெறவுள்ளன. அதை கனரா வங்கியின் தல... மேலும் பார்க்க

உண்மையான பாசம் காட்டும் திருமாவளவன்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

தன்னிடம் உண்மையான பாசத்தை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் காட்டி வருவதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளாா். அண்மையில் அவா் மேற்கொண்ட அரியலூா், பெரம்பலூா் பயணம் குறித்... மேலும் பார்க்க