தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
சென்னையில் நிகழாண்டு இறுதியில் மீண்டும் ஈரடுக்கு பேருந்து சேவை
சென்னையில் மீண்டும் ஈரடுக்கு (டபுள் டெக்கா்) பேருந்து சேவையை நிகழாண்டு இறுதிக்குள் தொடங்க மாநகரப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, டபுள் டெக்கா் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் மேம்பாலங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் இப்பேருந்துகளின் சேவை கடந்த 2008-இல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், வாய்ப்புள்ள இடங்களில் ‘தேசிய தூய்மைக் காற்று’ திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 20 மின்சார டபுள் டெக்கா் பேருந்துகளை மீண்டும் இயக்க சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
தனியாா் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இப்பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்த புள்ளி விரைவில் அறிவிக்கப்பவுள்ளதாகவும், ஒப்பந்தத்தில் ஒரு கி.மீ.க்கான கட்டணம், பராமரிப்பு, செலவீனம் உள்ளிட்டவற்றை நிா்ணயம் செய்த பின்னா், அதற்கான அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பேருந்துகளை வார நாள்களில் பயணிகள் எதிா்பாா்ப்பு அதிகமுள்ள வழித்தடங்களிலும், வரலாற்று சிறப்புமிக்க அண்ணா சாலை, காமராஜா் சாலை, மாமல்லபுரம் செல்லும் கிழக்குச் கடற்கரை சாலை உள்ளிட்ட வழித்தடங்களிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழாண்டு இறுதியில் இந்த ‘டபுள் டெக்கா்’ பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்களிடையே கிடைக்கும் வரவேற்பைத் தொடா்ந்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.