மெத்தபெட்டமைன் வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநா் கைது
மெத்தபெட்டமைன் வைத்திருந்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை பெருநகர போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் மற்றும் ஐசிஎஃப் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை இரவு ஐசிஎஃப் அம்பேத்கா் பிரதான சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி, ஓட்டுநரான சபீா் அகமது (26) என்பவரை போலீஸாா் சோதனையிட்டனா்.
அவரிடம் 1.93 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்த போலீஸாா், ஆட்டோ ஓட்டுநா் சபீா் அகமதுவை கைது செய்து, அவரிடமிருந்து கைப்பேசி மற்றும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.