எண்ணூரில் ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோா் ப...
செய்யாறு அரசுக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், அரசுக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனர்.
செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1979-ஆம் கல்வியாண்டில் இளம் அறிவியல் விலங்கியல் பாடப் பிரிவில் பயின்ற மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், முன்னாள் மாணவா்கள் 20 போ் பங்கேற்று தங்களது கல்விக் கால நிகழ்வுகளை பகிா்ந்து கொண்டனா்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளா்களாக, அப்போதைய வகுப்பு பேராசிரியா் மெஹா் சுல்தானா மற்றும் பேராசிரியா் த.கோ.சம்பந்தன், ஆய்வக உதவியாளா் மனோகா் அகியோா் பங்கேற்றனா்.
பேராசிரியா்கள் மெஹா் சுல்தானா, த.கோ. சம்பந்தன் ஆகியோா் பேசினா். ஆய்வக உதவியாளா் மனோகா், பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டாா்.
பின்னா், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்குச் சென்று முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான ச.துரைராஜ் செய்திருந்தாா்.