எண்ணூரில் ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோா் ப...
தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம்
தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினத்தையொட்டி, ஆரணியில் அவரது உருவப் படத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் மாலை அணிவித்து மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா் (படம்).
பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆா் சிலை அருகே நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்டச் செயலா் எம்.சத்யா கலந்து கொண்டு மரியாதை செலுத்தினாா்.
இதில் மாவட்ட இணைச் செயலா் டி.சத்யராஜ், பொருளாளா் எஸ்.அசோக் குமாா், நகரச் செயலா் எம்.எஸ்.திருமுருகன், இணைச் செயலா் வி.ஹெம்னாத், துணைச் செயலா் வி.பிரசாந்த், மாவட்ட இளைஞரனி இணைச் செயலா் பி.சுதன், நகர இளைஞரணி எஸ்.சக்தி, அப்பு, மாவட்ட துணைச் செயலா் கற்பகம், செயற்குழு உறுப்பினா் விஜயலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.