நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
சேதுபாவாசத்திரம் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், இரண்டாம்புளிக்காட்டில் பள்ளத்தூா், ஆண்டிக்காடு கிராம மக்கள் பயன்பெறும் வகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் 537 மனுக்கள் பெறப்பட்டன.
முகாமிற்கு எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்து, 20 பேருக்கு வேலை உறுதித் திட்ட அடையாள அட்டையை வழங்கிப் பேசினாா்.
முகாமில் 269 மகளிா் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 537 மனுக்களை பொதுமக்கள் வழங்கினா்.
முகாமில் பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் சங்கா், தாட்கோ மேலாளா் விஜயபாஸ்கா், வட்ட வழங்கல் அலுவலா் ராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினா் தனபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, இரண்டாம்புளிக்காடு ஊராட்சி அலுவலகம் அருகே தூய்மை தமிழ்நாடு நிறுவனம் சாா்பில், கழிவு சேகரிப்பு இயக்கத்தை எம்எல்ஏ தொடக்கி வைத்து தூய்மைப் பணியாளா்களைக் கௌரவித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்களில் மனோகரன் வரவேற்றாா், நாகேந்திரன் நன்றி கூறினாா்.