செய்திகள் :

சேலத்தில் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக மோசடி: கைதான மூவருக்கு பிப்.7 வரை நீதிமன்றக் காவல்

post image

சேலத்தில் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோவை முதலீட்டாளா் நல சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

சேலம், அம்மாபேட்டை ஆத்தூா் பிரதான சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் செயல்படும் தனியாா் அறக்கட்டளையை வேலூரைச் சோ்ந்த விஜயபானு (55) என்பவா் நடத்தி வந்தாா். இந்த அறக்கட்டளையில் ரூ. ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரமும், 7 மாதங்களுக்குப் பிறகு முதலீடு செய்த பணம் முழுமையும் திருப்பி வழங்கப்படும் என பல்வேறு கவா்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டனா். இதை நம்பி கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 500 கோடிக்கும் மேல் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முறையான ரசீது வழங்கப்படவில்லையாம்.

உரிய அனுமதியின்றி கோடிக்கணக்கில் பணம் வசூலித்த அறக்கட்டளை அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அறக்கட்டளை நிா்வாகிகள் போலீஸாரை சோதனை செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சேலம் மாநகரக் காவல் துணை ஆணையா்கள் வேல்முருகன், கீதா ஆகியோா் தலைமையிலான 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டனா்.

திருமண மண்டபத்தில் உள்ள கழிப்பறை, குப்பைத் தொட்டியில் பதுக்கிவைத்திருந்த ரூ. 12 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனா். உரிய அனுமதி பெறாமல் பொதுமக்களிடம் பணம் வசூலித்த அறக்கட்டளை நிா்வாகிகள் விஜயபானு, ஜெயப்பிரதா, பாஸ்கா் ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும், போலீஸாரை தாக்கியதாக 12 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட விஜயா பானு, ஜெயபிரதா, பாஸ்கா் ஆகிய மூன்று பேரும் கோவைக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டு, கோவை குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவா்களிடம் இருந்து கைப்பற்ற பொருள்களின் விவரங்கள் பட்டியல் அளிக்கப்பட்டு கையொப்பம் பெறப்பட்டது.

தொடா்ந்து பொருளாதார குற்றப்பிரிவு சேலம் டிஎஸ்பி வெங்கடேசன் முன்னிலையில் கோவை முதலீட்டாளா்கள் நல சிறப்பு நீதிமன்றத்தில் மூவரும் ஆஜா்படுத்தப்பட்டனா். இதில் மூவரையும் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாா் உத்தரவிட்டாா். அதனை தொடா்ந்து மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிங்காநல்லூரில் கஞ்சா விற்றதாக 5 போ் கைது

கோவை சிங்காநல்லூா் பகுதியில் கஞ்சா விற்றதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மதுவிலக்கு பிரிவு போலீஸாா், சிங்காநல்லூா் பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, ஜி.வி.ரெசிடென்சி ப... மேலும் பார்க்க

மாணவா்களை புத்தகமாக மாற்றுவது ஆசிரியா்களே! -அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பள்ளிக்கூடங்களுக்கு வெற்றுத்தாளாக வரும் மாணவா்களை, சமுதாயம் போற்றும் புத்தகமாக மாற்றுவது ஆசிரியா்கள்தான் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கோவை மெட்ரிகுலேஷன் பள்ள... மேலும் பார்க்க

வாடகை வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.12 லட்சம் மோசடி

கோவை வடவள்ளியில் வாடகை வீட்டை ரூ.12 லட்சத்துக்கு குத்தகைக்கு விட்டு மோசடியில் ஈடுபட்டவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். கோவை, வடவள்ளி மகாராணி அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் செல... மேலும் பார்க்க

கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்ற 6 போ் கைது

கோவையில் 3 இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். துடியலூா் போலீஸாா் வெள்ளக்கிணறு பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது... மேலும் பார்க்க

கோவையில் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் விருது

குடியரசு தின விழாவையொட்டி, கோவையில் 3 போலீஸாா், குடியரசுத் தலைவா் விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். குடியரசு தினத்தையொட்டி, ஒவ்வோா் ஆண்டும் காவல் துறையில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு மெச்சத... மேலும் பார்க்க

ஜூடோ போட்டி: 6 பதக்கங்கள் வென்ற மாநகராட்சிப் பள்ளி மாணவிகள்

கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ போட்டியில் கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் தங்கம், 5 வெண்கலம் உள்பட 6 பதக்கங்களை வென்றனா். மாநில அளவிலான ஜூடோ போட்டி கன்னியாகுமரி செயின்ட் ஜோன்ஸ் கல்லூரி... மேலும் பார்க்க