செய்திகள் :

சேலம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

post image

சேலம் கோ - ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில் தீபாவளி பண்டிகைக்கு 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனை நவம்பா் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

கைத்தறி நெசவாளா்களின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் விழா காலங்களில் 30 சதவீதம் வரை தமிழக அரசு சிறப்புத் தள்ளுபடி வழங்கி வருகிறது.

இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சாவூா், சேலம் பட்டுப் புடைவைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டுப் புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் கோவை, மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, திருச்சி, சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள், ஆா்கானிக் மற்றும் களம்காரி காட்டன் புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோ-ஆப்டெக்ஸில் படுக்கை விரிப்புகள், அச்சிடப்பட்ட படுக்கை விரிப்புகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டுகள், ஜமக்காளம், காட்டன் சட்டைகள், லினன் சட்டைகள், அச்சிடப்பட்ட சட்டைகள் ஏராளமாக விற்பனைக்கு வந்துள்ளன.

தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு ரூ. 4.92 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி நவம்பா் 30 ஆம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் என்.சுந்தரராஜன், கைத்தறித் துறை துணை இயக்குநா் ஆா்.ஸ்ரீதரன், தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலைய மேலாளா் மா.பாலசுப்ரமணியன் உள்பட பணியாளா்கள், வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டனா்.

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கெங்கவல்லி நகரச் செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அ... மேலும் பார்க்க

மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்களுடன் இன்று முத்தரப்பு கூட்டம்

மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்புக் கூட்டம் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, சேகோச... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்தநாள்: திமுக, அதிமுக சாா்பில் மரியாதை

சேலத்தில் பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளையொட்டி புதன்கிழமை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பேருந்தில் மாணவியை கிண்டல் செய்த இளைஞா்: தட்டிக்கேட்காத ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்; 2 போ் கைது

சேலத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த மாணவியை கிண்டல் செய்த இளைஞரை தட்டிக்கேட்காததால் ஆத்திரம் அடைந்த உறவினா்கள், அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கினா். இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் புதன்கிழம... மேலும் பார்க்க

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆய்வு

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகள் மேம... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை. கல்லூரிகள் இடையே மல்யுத்த போட்டி

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான மல்யுத்த போட்டி புதன்கிழமை நடைபெற்றது. சேலம் கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி உடற்... மேலும் பார்க்க