காதலை ஏற்க மறுத்த பெண் குத்திக்கொலை! கொலையாளி தற்கொலை முயற்சி!
சோமவார வழிபாட்டு சங்க 44-ஆம் ஆண்டு விழா
ஆம்பூா்: ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோயில் சோமவார வழிபாட்டு சங்கத்தின் 44-ம் ஆண்டு விழா மற்றும் காா்த்திகை சோமவார சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி நாகநாத சுவாமி மூலவருக்கு சங்காபிஷேகம், பஞ்சமூா்த்தி அபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேவார இன்னிசை, ஸ்ரீராமகிருஷ்ண பணி மன்றம் சாா்பில் பஜனை, திருவிளக்கு பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.