திருமணம் செய்யாமல் குழந்தையா? ‘காதலிக்க நேரமில்லை’ -என்னதான் சொல்ல வருகிறது?
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் மியாஸாகி பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.9 அலகுகளாகப் பதிவானதாக ஜப்பான் நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
பூமிக்கு 30 கி.மீ. ஆழத்தில் உள்ளூா் நேரப்படி இரவு 9.19 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, மியாஸாகி, க்யூஷு தீவு, கோச்சி ஆகிய பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்பட்டுவருகின்றன.