செய்திகள் :

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

post image

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் (வயது 79) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

சிறுநீரகம் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக தில்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சத்யபால் மாலிக், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் உயிரிழந்ததாக அவரது தனிச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சத்யபால் மாலிக் யார்?

1960 ஆம் ஆண்டில் மாணவர் சங்கத் தலைவராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சத்யபால் மாலிக், பாரதிய கிராந்தி தளம், காங்கிரஸ் மற்றும் வி.பி. சிங் தலைமையிலான ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளில் பணிபுரிந்துள்ளார். பின்னர், 2004 ஆம் ஆண்டில் பாஜகவின் இணைந்தார்.

உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் சட்டப்பேரவை உறுப்பினராக 1974 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். 1980, 1986 ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்துள்ளார்.

பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில் எழுந்த போஃபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸில் இருந்து விலகிய சத்யபால் மாலிக், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.

ஜனதா தளக் கட்சியில் இணைந்து 1989 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மத்திய இணையமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர், 2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக கட்சியில் இணைந்தார்.

2017 ஆம் ஆண்டு பிகார் ஆளுநராக பதவி வகித்தார். 2018 முதல் 2019 வரை ஜம்மு - காஷ்மீர் ஆளுநராக இவர் பதவி வகித்த காலத்தில்தான், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.

பின்னர், 2022 வரை கோவா, மேகாலயா ஆகிய மாநிலங்களின் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார்.

Former Jammu and Kashmir Governor Satya Pal Malik passes away

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

தேசிய தலைநகர் அருகே சட்டவிரோதமாக வசித்துவந்த ஐந்து வங்கதேசத்தினர் செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். காவல்துறையின் கூற்றுபடி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜூலை 15 முதல் தில்லிய... மேலும் பார்க்க

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

புனேவில் உள்ள புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், கையில் பணமில்லாததால், நடைபாதையில் படுத்துறங்கிய காட்சியும், அவர் நிறுவனத்தின் மீது வைத்திருந்த குற்றச்சாட்டும் சமூக வலைதளத்தில் வைரலாகிய... மேலும் பார்க்க

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு மாதத்துக்கும் ம... மேலும் பார்க்க

மறைந்த சத்யபால் மாலிக் பற்றி அறியப்படாத தகவல்கள்!

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வாழ்க்கைப் பயணம் என்பது, மாணவர் தலைவராகத் தொடங்கி, அரசியலில் மிகப்பெரிய உயரங்களைத் தொட்டு, லட்சியங்கள், சர்ச்சைகள், அரசியல் சாதனைகளின் பட்டியலுடன் நீள்... மேலும் பார்க்க

மேகவெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரகாசி! 20 விடுதிகள் சேதம்..12 பேர் மாயம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால், கனமழை பெய்து ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரகாசி மாவட்டத்தில், இன்று (ஆக.5) திடீரென உண்டான மேகவெடிப்பால் கனமழை பெய்து வரு... மேலும் பார்க்க

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கில் ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது பொதுப்பணித் துறையில் ஊழல் தொடர்பாக அப்ப... மேலும் பார்க்க