ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!
மேகவெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரகாசி! 20 விடுதிகள் சேதம்..12 பேர் மாயம்!
உத்தரகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால், கனமழை பெய்து ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உத்தரகாசி மாவட்டத்தில், இன்று (ஆக.5) திடீரென உண்டான மேகவெடிப்பால் கனமழை பெய்து வருவதால், தாராலி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
கீர் கங்கை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டு அபாயகரமான சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தால், சுமார் 20 - 25 தங்கும் விடுதிகள் அடித்துச் செல்லப்பட்டதுடன், 10 - 12 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி மாயமாகியுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, வெளியான விடியோக்களில், திடீரென பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில், கிராம மக்கள் சிக்கியுள்ள பரபரப்பான காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த திடீர் வானிலை மாற்றம் குறித்து தற்போது வரை உரிய விளக்கம் அளிக்கப்படாத நிலையில், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் அங்கு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க:ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!