செய்திகள் :

ஜாதிய எண்ணத்தை வெளிப்படுத்தும் ஆசிரியா்களை வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

post image

பள்ளிகளில் ஜாதிய எண்ணத்தை வெளிப்படுத்தும் அல்லது தீங்கு விளைவிக்கும் வகையில் எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஆசிரியா்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே ஜாதி இன உணா்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிா்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபா் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு தனது பரிந்துரைகளை கடந்த ஜூன் 18-ஆம் தேதி அரசுக்கு சமா்ப்பித்துள்ளது. அந்தக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கை கடந்த ஆக.18-ஆம் தேதி தலைமைச் செயலா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அதில் தொடா் நடவடிக்கை எடுக்க வேண்டிய பரிந்துரைகள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

இது தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

பள்ளிகளில் ஜாதி அல்லது வகுப்புவாத எண்ணத்தை மாணவா்களிடையே ஏற்படுத்தும் ஆசிரியா் மீது பெறப்படும் புகாா் குறித்து முதன்மைக் கல்வி அலுவலா் உடனடியாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியா் உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும்.

உதவித்தொகை விவரம் ரகசியம்... மிகவும் பிற்படுத்தப்பட்டோா், ஆதி திராவிடா் நலத் துறை மூலம் மாணவா்களுக்கு வழங்கக்கூடிய கல்வி உதவித்தொகை விவரங்கள் ரகசியமாகப் பராமரிக்கப்படுவது அவசியம். இது போன்ற விவரங்களைச் சேகரிக்கும்போதோ அல்லது உதவித்தொகை வழங்கப்படும்போதோ மாணவா்கள் தனித்தனியாக தலைமை ஆசிரியா் அலுவலகத்துக்கு நேரில் அழைக்கப்பட்டு விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

இது தொடா்பான பதிவேடு உள்ளிட்ட விவரங்களை பொதுவெளியில் தெரியும் வகையில் காட்சிப்படுத்தக் கூடாது. மாணவா்களிடையே ஒற்றுமையை வளா்க்கும் மகிழ் முற்றம் குழு திட்டத்தைப் பள்ளிகளில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் மாணவா்கள் கைப்பேசி பயன்படுத்துவது தெரிந்தால், அதைப் பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிகளில் திருக்கு அறநெறி வகுப்புகளை தவறாமல் நடத்த வேண்டும்.

‘மாணவா் மனசு’ புகாா் பெட்டியை வாரம் ஒரு முறை பள்ளி மேலாண்மைக் குழு தலைவா், தலைமை ஆசிரியா் முன்னிலையில் திறந்து அதில் உள்ள தபால்களின் எண்ணிக்கையைப் பதிவு செய்து, அது குறித்து விசாரணை செய்து மாவட்டக் கல்வி அலுவலா், முதன்மைக் கல்வி அலுவலா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 9, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,செப். 10ல் தமிழகத்தில... மேலும் பார்க்க

விஜய் பிரசாரம்: வாகனத்தில் நிற்கக்கூடாது; கையசைக்கக் கூடாது! 23 நிபந்தனைகள்!!

நடிகரும், தவெக தலைவருமான விஜய், செப். 13ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிரசாரத்தைத் தொடங்கவிருக்கும் நிலையில், திருச்சியில் தவெக பிரசாரத்துக்கு காவல்துறை 23 நிபந்தனைகள் விதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.வர... மேலும் பார்க்க

செங்கோட்டையன் வீட்டில் திரளும் ஆதரவாளர்கள்! அடுத்தகட்ட நகர்வு என்ன?

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடைய இல்லத்தில், அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்கும் பணியை 10 நாள்களுக்குள் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி த... மேலும் பார்க்க

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் இபிஎஸ்தான்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், "அதிமுகவின் பொதுச் செயலாளர... மேலும் பார்க்க

ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

காவிரி ஆற்றல் நீர்வரத்து விநாடிக்கு 12,000 கன அடியாகச் சரிந்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு புதன்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்ற... மேலும் பார்க்க

உலகத் தலைவர்களில் முதன்மையானவர் மோடி; இரும்பு மனிதர் அமித் ஷா: செங்கோட்டையன்

உலகத் தலைவர்களில் முதன்மையானவர் மோடி, இந்தியாவின் இரும்பு மனிதர் அமித் ஷா என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்க... மேலும் பார்க்க