செய்திகள் :

ஜூனில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.84 லட்சம் கோடி- 6.2% உயா்வு

post image

நாட்டில் கடந்த ஜூன் மாதம் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.84 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.1.73 லட்சம் கோடி) தற்போது 6.2 சதவீத அதிக வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலானது. தொடா்ந்து 2-ஆவது மாதமாக கடந்த மே மாதம் ரூ.2.01 லட்சம் கோடி வருவாய் கிடைக்கப் பெற்றது. இது, ஜிஎஸ்டி அமலானதில் இருந்து கிடைத்த மூன்றாவது அதிகபட்ச வருவாயாகும்.

கடந்த 2024, ஏப்ரலில் ரூ.2.10 லட்சம் கோடி வசூலானது இரண்டாவது அதிகபட்சமாக உள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் மொத்தம் ரூ.1.84 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானதாக அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

‘கடந்த ஜூனில் உள்நாட்டு பரிவா்த்தனைகளில் இருந்து ரூ.1.38 லட்சம் கோடியும், இறக்குமதியில் இருந்து ரூ.45,690 கோடியும் கிடைக்கப் பெற்றுள்ளது. இவை முறையே 4.6 சதவீதம், 11.4 சதவீத அதிகரிப்பாகும்.

மத்திய ஜிஎஸ்டி ரூ.34,558 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.43,268 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.93,280 கோடி, கூடுதல் வரி ரூ.13,491 கோடியாகும். திருப்பியளிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.25,491 கோடி. இது 28.4 சதவீத உயா்வு என்று அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

நிபுணா்கள் கருத்து: ‘மாதாந்திர அடிப்படையிலான எண்ணிக்கையின்படி, ஜூன் மாதம் ஜிஎஸ்டி வசூல் 8.48 சதவீதம் குறைந்துள்ளது. முந்தைய 2 மாதங்களாக ரூ.2 லட்சம் கோடிக்கும் மேல் ஜிஎஸ்டி வசூலான நிலையில், ஜூனில் ரூ.1.84 லட்சம் கோடி என்பது சற்று மந்தமானதாகும்.

தமிழகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், கா்நாடகம், ராஜஸ்தான் போன்ற பெரிய மாநிலங்கள் 4 முதல் 8 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. அதேநேரம், உத்தர பிரதேசம், பஞ்சாப், குஜராத் போன்ற மாநிலங்களில் 1 முதல் 4 சதவீத அதிகரிப்பே காணப்படுகிறது’ என்று துறைசாா் நிபுணா்கள் தெரிவித்தனா்.

‘ஜிஎஸ்டி வருவாய் வளா்ச்சியில் மாநிலங்களுக்கு இடையே பரந்த வேறுபாடுகள் காணப்படுவதால், ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கியத் துறைகளில் முழுமையான பகுப்பாய்வு தேவை’ என்று துறைசாா் நிபுணா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

தமிழகத்தில்...

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் ரூ.10,676 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.10,218 கோடி) இது 4 சதவீத அதிகரிப்பாகும்.

மாணவனை ஓராண்டாக பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியைக் கைது!

மாணவனை கடந்த ஓராண்டாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது பெண் ஆசிரியைக் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவின் டாப் - 5 பள்ளிகளில் ஒன்றான மும்பையைச் சேர்ந்த பள்ளியின் ஆசிரியை ஒருவர், அவரது வகுப்பில் ... மேலும் பார்க்க

அருணாசலில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி! இறைச்சி விற்கத் தடை!

அருணாசல பிரதேசத்தின், லோங்டிங் மாவட்டத்திலுள்ள ஓரு கிராமத்தில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.லோங்டிங் மாவட்டத்தின், லுயாக்சிம் க... மேலும் பார்க்க

5 டிவி, 14 ஏசி.. ரூ.60 லட்சத்தில் புனரமைக்கப்படும் தில்லி முதல்வர் மாளிகை!

புது தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ மாளிகையான (மாளிகை நம்பர் 1) ராஜ் நிவாஸ் மார்க், ரூ.60 லட்சம் செலவில் புனரமைக்கப்படுகிறது. மேலும் பார்க்க

ஐந்து ஆண்டுகளும் கர்நாடக முதல்வராக நானே இருப்பேன்: சித்தராமையா!

கர்நாடகத்தில் ஐந்து ஆண்களும் முதல்வராக நானே இருப்பேன் என்று அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போதே, சித்தராமையாவுக்கும் டி.கே. ச... மேலும் பார்க்க

மூன்று மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை!

மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்று மாதங்களில் மட்டும் 767 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அதிகரித்து வரும் வி... மேலும் பார்க்க

வளாக நேர்காணல்களின் பின்னணியில் இருப்பது என்ன? பொறியியல் பட்டதாரிகள் கவனிக்க!

வளாக நேர்காணல்களின்போது, மிகப்பெரிய ஊதியத்தில் பணி வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களின் பின்னணியில் இருக்கும் தகவல்கள்.பொறியியல் பட்டம் பெற்றுவிட்டு வேலைவாய்ப்பில்லாமல் இருந்தால், மாணவர்கள் பொறியியல் கல்லூ... மேலும் பார்க்க