அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு
ஐந்து ஆண்டுகளும் கர்நாடக முதல்வராக நானே இருப்பேன்: சித்தராமையா!
கர்நாடகத்தில் ஐந்து ஆண்களும் முதல்வராக நானே இருப்பேன் என்று அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போதே, சித்தராமையாவுக்கும் டி.கே. சிவகுமாருக்கும் இடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவின. நீண்ட இழுபறிக்குப் பிறகு மூத்த தலைவர்களின் பேச்சுவார்த்தை உறுதியைத் தொடர்ந்து டி.கே. சிவகுமார் துணை முதல்வர் பதவியை ஏற்றார்.
முதல்வராக சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மாற்றம் குறித்து பேச்சு அக்கட்சி நிர்வாகிகளுக்குள் எழுந்தது. இதனிடையே செவ்வாய்க்கிழமையான நேற்று சித்தராமையாவும், சிவகுமாரும் செய்தியாளர்களை சந்தித்து, எங்களைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலையில்லை. நாங்கள் (சிவகுமாரும் - சித்தராமையாவும்) ஒற்றுமையாகவே இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து புதன்கிழமை செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சித்தராமையா,
காங்கிரஸ் அரசின் ஸ்திரத்தன்மை குறித்து பாஜக பொய்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்கின்றது. ஐந்து ஆண்டுகள் பாறை போல உறுதியாக ஆட்சியில் இருக்கும். பதவியில் நான் இருப்பேன். உங்களுக்கு ஏன் சந்தேகம்?" ஐந்து ஆண்டுகளும் பதவியைத் தொடர்வேன் என்று கூறினார்.
"பாஜகவை யாரும் நம்புவதில்லை. அவர்கள் பொய் மட்டுமே சொல்கிறார்கள். அவர்கள் பொய் சொல்வதில் வல்லுநர்கள். அவர்களுக்கு உண்மையை எப்படிப் பேசுவது என்று தெரியவில்லை. பாஜகவினர் நம்பினாலும் நம்பாவிட்டாலும், எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் அனைவரும் (காங்கிரஸில்) ஒன்றாக இருக்கிறோம்.
சமீபத்தில் மைசூரில் நான் கூறியது போல், நாங்கள் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம். எங்கள் அரசு ஒரு பாறை போல உறுதியாக இருக்கும். பாஜகவினர் பக்ல்கனவு காண்கிறார்கள்.
பாஜக ஆட்சியிலிருந்தபோது எதுவும் செய்யவில்லை, நீர்ப்பாசனம், கிராமப்புற மேம்பாடு, பொதுப்பணி, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர்கள் உழைத்தற்கான ஆதாரம் என்ன? பொய் சொல்வதன் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள் என்று கூறினார்.
காங்கிரஸில் அமைச்சர் பதவிக்கான வேட்பாளர்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த முதல்வர்.. காங்கிரஸ் உயர்நிலைக் குழுதான் முடிவு செய்யும்.
ஜனநாயகத்தில், அனைவருக்கும் முதல்வர் ஆகும் உரிமை உண்டு. எங்கள் கட்சியில் சுமார் 140 பேர் (சட்டப்பேரவை உறுப்பினர்கள்) உள்ளனர். 34 பேர் மட்டுமே அமைச்சர்களாக ஆக்கப்பட முடியும். எல்லோரையும் அமைச்சர்களாக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
summary
Karnataka Chief Minister Siddaramaiah on Wednesday asserted that he will be in office for a full five-year term.