ஜூலை 5-இல் தேமுதிக ஆா்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து தேமுதிக சாா்பில் ஜூலை 5-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருப்புவனம் அருகே காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாா் தாக்கப்பட்டு, உயிரிழந்ததைக் கண்டித்து திருப்புவனம் வெள்ளிச் சந்தைத் திடலில் சனிக்கிழமை (ஜூலை 5) மாலை 4 மணிக்கு தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதில், தேமுதிக சிவகங்கை மாவட்ட அனைத்து நிலை கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.