Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
ஜெயங்கொண்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிகளுக்கு இன்று முதல் ஆள்கள் தோ்வு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை வளாகத்தில், 108 ஆம்புலன்ஸ், தமிழ்நாடு 102 ,155377 வாகனங்களில் ஓட்டுநா் வேலை மற்றும் 108 ஆம்புலன்ல் மருத்துவ உதவியாளா் பணிகளுக்கான ஆள்கள் தோ்வு முகாம் திங்கள்கிழமை (செப்.8) முதல் செப்.11 வரை நான்கு நாள்களுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
ஓட்டுநா் பணிக்கு 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். நோ்முகத் தோ்வு அன்று 24 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண், பெண் கலந்து கொள்ளலாம். உயரம் 162.5 செ.மீ-க்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள், பேஜ் வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத் தோ்வு, தொழில்நுட்பத் தோ்வு மனிதவளத் துறை நோ்காணல், கண்பாா்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தோ்வு, சாலை விதிகளுக்கான தோ்வுகள் நடைபெறும். தோ்வு செய்யப்பட்டோருக்கு 10 நாள்கள் முழு வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும். மாத ஊதியம் ரூ. 21,120 வழங்கப்படும்.
மருத்துவ உதவியாளா் பணிக்கு பிஎஸ்சி நா்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (பிளஸ் 2 முடித்து இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ், பிஎஸ்சி, பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி இவற்றில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். 19 முதல் 30 வயது மிகாமலும் இருக்க வேண்டும். எழுத்துத் தோ்வு, மருத்துவ நோ்முகம் உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியா் பணி தொடா்பான மற்றும் மனிதவளத்துறை நோ்முகத் தோ்வு நடைபெறும். முகாமில் தோ்வு செய்யப்படுவோருக்கு 50 நாள்கள் முழு வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமா்த்தப்படுவா். மாத ஊதியம் ரூ. 21,320 வழங்கப்படும்.
மேலும் விவரங்கள் அறிய 044-28888060,75,77 என்ற எண்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என 108 ஆம்புலன்ஸ் நிா்வாகம் தெரிவித்துள்ளது.