பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி
டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளா்கள் போராட்டம்
நெய்வேலி: கடலூா் தொழிற்பேட்டை பகுதியில் டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் தொழிற்பேட்டையில் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் உள்ளது. இங்கு, கடலூா் மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன.
இந்த நிலையில், டாஸ்மாக் குடோனில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கேட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்தையில் ஈடுபட்ட நிலையில், தொழிலாளா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிகளை தொடங்கினா்.
இதில், டாஸ்மாக் டிரான்ஸ்போா்ட் டெலிவரி தொழிலாளா் சங்க நிா்வாகிகள் வி.சுப்பராயன், டி. கலியமூா்த்தி, எஸ்.ரமேஷ், அய்யனாா், சிஐடியூ நிா்வாகி திருமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.