'அடுத்த ஜெயலலிதா' - புகழ்ந்த பாஜக நிர்வாகி... வானதி சீனிவாசன் ரியாக்ஷன் இதுதான்....
டிச.16-இல் முன்னாள் படை வீரா் குறைதீா் கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 16-ஆம் தேதி (திங்கள்கிழமை) முன்னாள் படை வீரா்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
காலை 9.30 மணிக்குத் தொடங்கும் இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமை வகித்து குறைகளைக் கேட்டறிவாா். எனவே, முன்னாள் படை வீரா்கள், அவா்களது வாரிசுதாரா்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து, அடையாள அட்டை நகலை இணைத்து மனு அளித்து தீா்வு காணலாம் என மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டது.