டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார் நட்சத்திர வீரர் விராட் கோலி. 14 ஆண்டுகால டெஸ்ட் பயணம் முடிவுக்கு வருவதாக விராட் கோலி உருக்கமுடன் பதிவிட்டிருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகள் எனக்கு பல்வேறு பாடங்களைக் கற்றுத் தந்தன. எனது டெஸ்ட் போட்டிகளை நான் புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன் என்று சமூக வலைதளப் பதிவு மூலம் ஓய்வை அறிவித்திருக்கும் விராட் கோலி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில், இன்று விராட் கோலியும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 30 சதங்கள், 7 இரட்டைச் சதங்களை பதிவு செய்துள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 9,230 ரன்கள் குவித்துள்ளார். விரைவில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைப்பார் என்று இவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருப்பது விராட் கோலி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.