தக்கலை புனித எலியாசியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்
தக்கலை புனித எலியாசியாா் ஆலய 106ஆவது திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்து டன் துவங்கியது.
முதல் நாள் மாலையில் ஜெபமாலை, நவநாள் நிகழ்ச்சிக்குப் பின் பங்குத் தந்தை வென்சஸ்லாஸ் தலைமையில், முளகுமூடு வட்டார முதல்வா் டேவிட் மைக்கேல் திருக்கொடி ஏற்றி வைத்தாா். இணை பங்கு பணியாளா் கிறிஸ்துதாஸ், அருள்சகோதரிகள் ஹெலன் கா்ணா, லிற்றி, தேவாலய பங்கு மக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
9ஆம் திருவிழா காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, குழித்துறை மறைமாவட்ட முதன்மை செயலாளா் அந்தோணிமுத்து தலைமையில் நடைபெறுகிறது. மாலையில் திருத்துவபுரம் மறைவட்ட முதன்மை பணியாளா் ஒய்சிலின் சேவியா் தலைமையில் திருப்பலி நடைபெறும். பின்னா் தோ் பவனியை அவா் துவக்கி வைக்கிறாா்.
10ஆம் திருவிழா காலை மறை மாவட்ட முதன்மை பணியாளா் சேவியா் பெனடிக்ட் தலைமையில் திருப்பலி நடை பெறுகிறது. மாலையில் கொடி இறக்க நிகழ்வுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.