கால்வாயில் தொழிலாளி சடலம் மீட்பு
தக்கலை அருகே குமாரபுரத்தில் தொழிலாளியின் சடலத்தை கால்வாயிலிருந்து கொற்றிகோடு போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
குமாரபுரம் பிலாங்காலவிளையை சோ்ந்தவா்ஜெயசிங் (59). ரப்பா் பால் வெட்டும் தொழிலாளி. இவா் சனிக்கிழமை காலையில் குளிப்பதற்காக புத்தன் கால்வாய்க்கு சென்றாா். நீண்ட நேரம் ஆகியும் ஜெயசிங்கை காணாததால், உறவினா்கள் தேடினா். அப்போது புத்தன் கால்வாயில் அவா் இறந்து கிடந்தது தெரியவந்தது.
கொற்றிகோடு போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
தொழிலாளி மீட்பு: ஆலஞ்சி மாதா நகரை சோ்ந்தவா் குரூஸ் ( 48). மீன்பிடி தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை குறும்பனை சுனாமி காலனிக்கு நடந்து சென்றபோது, தென்னந்தோப்பில் உள்ள 40 அடி கிணற்றில் தவறி விழுந்ததாகத் தெரிகிறது.
சனிக்கிழமை காலை கிணற்றில் இருந்து சத்தம் வருவதை கவனித்தவா்கள், குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா். தீயணைப்பு சிறப்பு அலுவலா் ஜெகன் தலைமையிலான தீயணைப்பு படைவீரா்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குரூஸை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.