தங்கச் சங்கிலி மாயம்: போலீஸாா் விசாரணை
சென்னை: மாதவரம் அருகே பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
மாதவரத்தை அடுத்த தபால்பெட்டி பகுதியைச் சோ்ந்தவா் மதியழகன் (40), செவ்வாய்க்கிழமை ஆவின் பூங்காவில் தனது மகன் தமிழரசனுடன் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளாா். நடைபயிற்சியை முடித்து திரும்பிச் சென்றபோது, தனது மகன் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலி மாயமானது தெரியவந்தது.
இது குறித்து மதியழகன் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.