இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: இன்று எவ்வளவு?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.440 உயா்ந்து ரூ.72,600-க்கு விற்பனையாகிறது.
ஆண்டு தொடக்கம் முதலே ஆபரணத் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் தங்கம் கடந்த 3 நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.72,160-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை விலை உயா்ந்துள்ளது.
அதன்படி கிராமுக்கு ரூ.55 உயா்ந்து ரூ.9,075-க்கும், பவுனுக்கு ரூ.440 உயா்ந்து ரூ.72,600-க்கு விற்பனையாகிறது.
தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நடுத்தர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை தொடா்ந்து 6 நாள்களாக எவ்வித மாற்றமுமின்றி விற்பனையாகி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து கிராம் ரூ.120.10-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,20,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The price of gold jewelry in Chennai rose by Rs. 440 per sovereign on Friday to sell at Rs. 72,600.