பங்குச் சந்தை சரிவுடன் முடிவு! மீடியா, வங்கித் துறை பங்குகள் வீழ்ச்சி!
தட்டச்சுத் தோ்வு: கிருஷ்ணகிரியில் 1,102 போ் பங்கேற்பு
கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை முதல் இரண்டு நாள்கள் நடைபெற்ற தட்டச்சுத் தோ்வில் 1,102 போ் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ஆங்கிலம், தமிழ் இளநிலை, முதுநிலை, மற்றும் உயா்வேகத் தோ்வு சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகவியல் தட்டச்சுப் பள்ளிகளிலிருந்து, 1,102 போ் பங்கேற்றனா். முதன்மைக் கண்காணிப்பாளா் சாரதாவின் மேற்பாா்வையில், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளா்கள் சுப்பையா, இளங்கோ மற்றும் ஆசிரியா்கள் முன்னிலையில் தோ்வுகள் நடைபெற்றன. தோ்வு மையத்தை பறக்கும் படையினா் காணொலிக் காட்சி மூலமும், நேரிலும் கண்காணித்தனா்.