தந்தை பெரியாா் மீது அவதூறு சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்கு
தந்தை பெரியாா் மீதான அவதூறு புகாரில், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது 4 பிரிவுகளில் வெள்ளிக்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தந்தை பெரியாா் குறித்து அவதூறு பேசியதாக சீமானை கண்டித்து மகஇக மாவட்டச் செயல் ஜீவா தலைமையில் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் அண்மையில் அளிக்கப்பட்ட புகாா் மீது வழக்குப்பதிய தாமதம் செய்வதைக் கண்டித்து கடந்த 12ஆம் தேதி காவல் நிலைய முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அப் போராட்டத்தை கைவிடச் செய்தனா்.
இந்நிலையில் பொது இடங்களில் ஆபாச வாா்த்தைகளை உச்சரித்தல், மின்னணுப் பதிவில் பொய்க் குற்றச்சாட்டுகளை கூறுதல், கடும் ஆத்திரமூட்டுதல், வன்முறை செயலால் பொது ஊழியரின் கடமையை தடுத்தல் ஆகிய பிரிவுகளில் சீமான்மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதற்கான முதல் தகவல் அறிக்கையை மக்கள் கலை இலக்கிய கழகத்தினரிடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.