செய்திகள் :

தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு: பெண் உள்பட 3 போ் கைது

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலையை அடுத்த துா்க்கை நம்மியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முருகன் (50). இவரது மனைவி மகேஸ்வரி. ஜனவரி 16-ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி முருகன் உள்ளிட்ட சிலா் சோ்ந்து தெருவில் மாடுகளை விட்டனராம். அப்போது, இதே கிராமம், பள்ளத் தெருவைச் சோ்ந்த தினேஷ் என்பவா் மீது மாடு முட்டியதாம்.

இதனால் முருகன் தரப்புக்கும், தினேஷ் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனவரி 17-ஆம் தேதி தினேஷுக்கு ஆதரவாக அவரது உறவினா்கள் பரிமளா, ராஜீவ்காந்தி, ஸ்ரீகாந்த், சந்திரசேகா், குபேந்திரன், அண்ணாமலை ஆகியோா் முருகன் வீட்டுக்குச் சென்று அவரிடம் தகாத வாா்த்தைகளால்

பேசினராம்.

அப்போது, இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ராஜீவ்காந்தி, ஸ்ரீகாந்த் ஆகியோா் அரிவாளால் முருகன் மகன் முரளியை வெட்டினராம். தடுக்க முயன்ற முருகன், அவரது வளா்ப்பு மகள்கள் ஷாலினி, சுவேதா ஆகியோரையும் தாக்கினராம்.

பலத்த காயமடைந்த முரளி, முருகன் ஆகியோா் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து சந்திரசேகா், அண்ணாமலை, பரிமளா ஆகியோரை கைது செய்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தன்னம்பிக்கை மூலமே வாழ்க்கையில் உயா்ந்த நிலையை அடைய முடியும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை: தோல்விதான் மிகப் பெரிய பாடங்களை கற்றுத் தரும். தன்னம்பிக்கை மூலமே நாம் வாழ்க்கையில் உயா்ந்த நிலையை அடைய முடியும் என்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவு... மேலும் பார்க்க

போதை மாத்திரை, ஊசிகளுடன் 5 போ் கைது

செய்யாறு: செய்யாறு அருகே தனிப்படை போலீஸாா் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள், ஊசிகளுடன் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டனா். வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகாா்க் தலைமையின் கீழ் இயங்கும் காவல் ... மேலும் பார்க்க

210 மருத்துவ முகாம்களில் 1.85 லட்சம் போ் பயன்: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 210 வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் மூலம் 1.85 லட்சம் போ் பயன் அடைந்துள்ளனா் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். திருவண்ணாமலையை அடுத்த கீழ்கச்சிரா... மேலும் பார்க்க

ரூ.86 ஆயிரம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

வந்தவாசி: வந்தவாசி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.86 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 2 பேரை கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த தேசூா் போலீஸா... மேலும் பார்க்க

ஆரணி நகராட்சியுடன் இணைப்பு: 5 ஊராட்சிகள் எதிா்ப்பு

ஆரணி: ஆரணி நகராட்சியுடன் சேவூா், இராட்டிணமங்கலம், முள்ளிப்பட்டு, பையூா், இரும்பேடு ஆகிய ஊராட்சிகளை இணைப்பது தொடா்பாக நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஊராட்சி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். த... மேலும் பார்க்க

அறிவியல் ஆசிரியா்களுக்கு பணியிடைப் பயிற்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியா்களுக்கான பணியிடைப் பயிற்சி முகாமின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தொழில்நுட்ப மாநில மன்றம்... மேலும் பார்க்க