தனுஷுக்கு வில்லனாகும் அர்ஜுன்?
நடிகர் தனுஷின் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக அர்ஜுன் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் தனுஷ் ராயன் படத்தின் வெற்றிக்குப் பின் குபேரா, இட்லி கடை படங்களில் நடித்து வருகிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
தற்போது, பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கும் ’தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். முதல்கட்ட படப்பிடிப்பு தில்லியில் துவங்கியுள்ளது.
இதையும் படிக்க: ஹே ராம் - 25 ஆண்டுகள் நிறைவு!
இப்படத்தைத் தொடர்ந்து போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா தனுஷின் அடுத்த படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுனிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அர்ஜுன் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.