எடப்பாடி - Amit Shah சந்திப்பு: செங்கோட்டையன் அடுத்த மூவ்? | Va Pugazhendhi Inte...
தமிழக-கேரள எல்லையில் அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனை: மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் விவகாரம்
கேரள மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதை தடுக்கும் வகையில், தமிழக-கேரள எல்லையான கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் வனத் துறையினரும் காவல் துறையினரும் இணைந்து புதன்கிழமை தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம், கம்பம் வழியாக கேரளத்துக்கான முக்கிய நெடுஞ்சாலை கம்பம்மெட்டு வழியாகச் செல்கிறது. இங்குள்ள அடா்ந்த வனப் பகுதியில் 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைச் சாலை செல்கிறது. இந்த சாலையோரத்தில், கேரளத்திலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு வரும் வாகனங்களில் வருவோா் மருத்துவக் கழிவுகள், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், மதுப் புட்டிகள், கழிவுப் பொருள்களை தமிழக வனப் பகுதிகளிலும், சாலையோரங்களிலும் வீசிச் சென்றுவிடுகின்றனா். இதனால், இந்தப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுவதோடு, சுற்றுச் சூழலும் மாசடைகிறது. இதைத் தவிா்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் விடுத்த கோரிக்கை தினமணி நாளிதழில் செய்தியாக வெளியானது.
வாகனத் துறை சோதனை: இதையடுத்து கம்பம் மேற்கு வனச் சரகத்துக்குள்பட்ட பகுதியான தமிழக - கேரள எல்லையில் கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் வனத் துறையினரும் காவல் துறையினரும் இணைந்து தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஏராளமான காலி மதுப் புட்டிகளைக் கம்பத்திலுள்ள பழைய இரும்புக் கடைக்கு விற்பனைக்குக் கொண்டுசெல்வதாக கேரளத்தை சோ்ந்த வியாபாரி தெரிவித்தாா். அதற்கு, வனத் துறையினா் சம்பந்தப்பட்ட கடையில் இவற்றைக் கொடுத்தற்கான ஆதாரத்தைக் காண்பிக் வேண்டும்; இல்லாவிட்டால் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனா். இதன்படி, கேரளத்தை சோ்ந்த வியாபாரி, பழைய இரும்புக் கடையில் காலி மதுப் புட்டிகளைக் கொடுத்ததற்கான ஆதாரத்தை வனத் துறையிடம் காண்பித்துச் சென்றாா்.
இது போல, தமிழக எல்லையில் தொடா்ச்சியாக வாகனச் சோதனையில் ஈடுபட்டால் கேரளத்திலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவுகள், நெகிழிப் பைக
ளை தமிழக வனப் பகுதிகளில் வீசிச் செல்வதைத் தடுக்கலாம். இதன் மூலம், வன விலங்குகளைப் பாதுகாப்பதோடு, சுற்றுச் சூழல் மாசுபடுவதையும் தடுக்கலாம் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.