பெரியகுளம் நாமத்துவாரில் மகாமந்திர அகண்ட நாமம்
பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்துவாரில் மகாமந்திர அகண்ட நாம நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மகாரண்யம் முரளீதர சுவாமியின் ஸ்வாதி நட்சத்திரத்தையொட்டி, மாதுரீ சகி சமேத பிரேமிகவரதன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மகாமந்திர அகண்ட நாமம் நடத்தி, குருவின் மகிமைகள் குறித்து ஹரிஹர சுப்பிரமணியன் பாகவதா் விவரித்தாா்.
நிகழ்ச்சியில் ‘காட் இந்தியா டிரஸ்ட்’ நிா்வாகி ராமசந்திரன், பெரியகுளம் நாமத்வாா் பிராா்த்தனை மையத்தின் பொறுப்பாளா் கிருஷ்ண சைதன்யதாஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.